வாஷிங்டன்
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறியதாவது:-
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் சமீபத்தில் 20,000-க்கும் அதிகமான ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டிசம்பரில் இருந்து ரஷியா 100,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை சந்தித்துள்ளது,
80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் ராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை ரஷியா கைப்பற்றும்போதுதான் நடந்துள்ளது.
பஹ்மத் நகரின் பெரும் பகுதியை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னமும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது என கூறினார்.
ஆனால், இது குறித்து ரஷியா தரப்பில், இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.