என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி கணேசன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டார், விவசாய பிரதிநிதிகள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை பேச்சு வார்த்தை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் நெய்வேலி, புவனகிரி எம்எல்ஏக்கள் மற்றும் என்எல்சி அதிகாரிகள் பங்கேற்றனர். பாமகவுக்கு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் மக்களின் பிரதிநிதியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
என்எல்சி விவாகரத்தை பொருத்தவரை ஆளும் திமுக அரசு மத்திய அரசுடன் கூட்டணி வைத்து, விவசாய நிலங்களை என்எல்சி நிர்வாகத்திற்கு தாரை வார்ப்பதிலேயே முன் முனைப்பாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்து வந்த நிலையில்,
இன்று அமைச்சர்கள் விவசாய பிரதிநிதிகள், என்எல்சி அதிகாரிகளுடன் நேரில் அழைத்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம், அவர்களுக்குள் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு, நிலம் கையகப்படுத்தும் பணியில் இறங்குவதற்கு உண்டான செயல் திட்டங்களை வகுக்கலாம் என்ற காரணத்தினால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.