ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளை குறித்த கருத்தரங்கம் – சிட்கோ அறிவிப்பு..!

சிட்கோ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது;

கருத்தரங்கம் இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (2 நாட்கள்) பயிற்சியினை வரும் 05.05.2023 தேதி முதல் 06.05.2023-ம் தேதி வரை (காலை 10.30 முதல் மதியம் 2.00 மணி வரை) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள்.

ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள். ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள். போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

முன்பதிவு அவசியம்: சிட்கோ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 44-22252081/22252082, 9677152265, 8668102600.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.