ப்ரீமீயம் தொழில்நுட்ப பிராண்டான டெக்னோ, மடித்துவைக்கும் திறன் கொண்ட அதன் முதன் முதல் ஸ்மார்ட்போன் PHANTOM V Fold 5G – ஐ, மிகப்பிரபலமான பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன், சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்தார். ‘Beyond the Extraordinary’ (அசாதாரணத்தையும் கடந்து) என்ற விருதுவாக்குடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பேண்ட்டம் V ஃபோல்டு ஸ்மார்ட் போனின் மூலம் கைக்கு அடக்கமாக மடித்து வைக்கக்கூடிய மொபைல் சாதன சந்தையில் டெக்னோ வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது. பேன்ட்டம் என்ற இதன் முதன்மை புராடக்ட் அணிவரிசையின் கீழ் இத்தயாரிப்பு அறிமுகம் நிகழ்கிறது.
ரூ.88,888 என்ற விலை கொண்ட பேண்ட்டம் V ஃபோல்டு 5ஜி, 7.85″ 2K+ LTPO என்ற மிகப்பெரிய டிஸ்பிளே உடன் மடிக்கக்கூடிய திறன் வசதியுடன் வெளிவருகிறது. இரட்டைத்திரை டிஸ்பிளே, 5-லென்ஸ்களுடன் கூடிய அல்ட்ரா ஹெச்டி கேமரா அமைப்பு ஆகிய அம்சங்களினால் நிகரற்ற அனுபவத்திற்கும், அற்புதமான நிழற்படத் தரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களில் பயனாளிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது என்ற இலக்கோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், அதன் சிறப்பான LTPO திரைகளின் வழியாக இதை சாதித்திருக்கிறது. மிகத்துல்லியமான, தெளிவான டிஸ்பிளே மற்றும் பார்வை நிலைகளுக்கு 10பிட் டிஸ்பிளேயை மற்றும் 10-120Hz என்ற உயர்வான ரீஃபிரெஷ் விகிதத்தையும் வழங்குகிறது. மடித்திருப்பது, மடிக்காமல் வைத்திருப்பது என்ற இரு நிலைகளிலும் சிரமமே இல்லாத நகர்வுகளையும் மற்றும் எளிதான மாற்றங்களையும் இது சாத்தியமாக்குகிறது.
இந்த அழகிய ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரு கவர்ச்சிகரமான வண்ணங்களில் வெளி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கிடைக்கப்பெறும் சுற்றுச்சூழல் தோழமையுள்ள ஆர்கானிக் மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டிருக்கும் 100% புதுப்பிக்கக்கூடிய திறன்கொண்ட ஃபைபரினால் இதன் பின்புற கவர் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப்பெரிய 5000 mAh பேட்டரியுடன் ஆற்றல் செறிவு கொண்ட 45W சார்ஜரை இந்த மொபைலில் அறிமுகம் செய்திருப்பதன் மூலம் மொபைல் தயாரிப்புகளில் மடிக்கக்கூடிய சாதனங்களின் பொருள் வரையறையை டெக்னோவின் இப்புதிய அறிமுகம் மறுவரையறை செய்கிறது. பெரிய அளவிலான டிஸ்பிளேக்களில் செயலாற்றுவதற்கு உகந்தவாறு அமைத்துக்கொள்வதற்கு ஒரு திறன்மிக்க UI – ஐ வழங்குவதற்காக ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாக கொண்ட ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட HiOS – ன் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.
ஸ்பிளிட் ஸ்க்ரீன், பேரலல் விண்டோ, ஸ்மார்ட் டச், மல்ட்டிபிள் விண்டோ போன்ற வியப்பூட்டும் அம்சங்களின் மூலம் சிரமமேயின்றி பல்வேறு செயல்பாடுகளை உயர்வான செயல்திறனுடன் பயனாளிகள் பயன்படுத்தி நிகரற்ற அனுபவத்தைப் பெறமுடியும். இதற்கும் கூடுதலாக, 4-நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் அடிப்படையிலான மிக நவீன, மேம்பட்ட மீடியாடெக் 9000+ 5ஜி புராசஸரை இந்த ஃபோல்டு ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது. பேண்ட்டம் V ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து டெக்னோ மொபைல் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் திரு. அரிஜித் தலபத்ரா, கூறியதாவது: “புதுயுக நுகர்வோர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதன் வழியாகவும், எமது ஸ்மார்ட்போன்கள் மீது வகையினத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு எமது விரிவான சூழலமைப்பை திறம்பட பயன்படுத்துவதன் வழியாகவும் 40K முதல் 100K என்ற விலை வரம்பிற்குள் பேன்ட்டம் சீரிஸ் வழியாக அல்ட்ரா ப்ரீமியம் பிரிவில் எமது தயாரிப்புகளது அணிவரிசையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளோடு பயனாளிகளது கருத்துகளையும், கவனத்தையும் கொண்டு தொழில்நுட்ப புத்தாக்கங்களை மேற்கொள்வது என்ற டெக்னோவின் தொடர்ச்சியான உறுதியை பிரதிபலிப்பதாக பேன்ட்டம் சீரிஸ் – ன் கீழ் சிறப்பான தயாரிப்புகளின் அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது. எமது தயாரிப்புகள் அனைத்துமே, பேன்ட்டம் சீரிஸ் உட்பட, இந்தியாவிலேயே பெருமையுடன் தயாரிக்கப்பட்டவை. உலகின் முதல் ரிட்ராக்டபிள் போர்ட்ரெய்ட் கேமராவுடன் வெளிவரும் இத்தொழில்துறையின் ஒரே ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பேன்ட்டம் X2 புரோ கொண்டிருக்கிறது. இப்போது பேண்ட்டம் V ஃபோல்டு அறிமுகத்தின் மூலம் இவ்வகையினத்தில் மிகச்சிறந்த ஸ்க்ரீன் அளவு, பேட்டரி, கேமரா மற்றும் முதன்மையான புராசஸர் ஆகிய அம்சங்களுடன் மடித்து வைக்கக்கூடிய மொபைல் வகையினத்தில் நாங்கள் வலுவாக நுழைந்திருக்கிறோம். ஒரு நிறுவனமாக, மிதமான விலைகளிலும், மிக நவீன தொழில்நுட்பத்தை எமது நுகர்வோர்களுக்கு வழங்குவது என்ற இலக்கை நோக்கி நாங்கள் எப்போதும் செயலாற்றி வருகிறோம். பேண்ட்டம் V மொபைலின் மூலம் ரூ. 100K என்ற விலை வரம்பிற்கும் குறைவான மடிக்கக்கூடிய மொபைல் சாதன சந்தைப்பிரிவை மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும். பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் மல்ட்டிடாஸ்க்கிங் புதிய ஃபார்ம்ஃபேக்டர் மற்றும் லைஃப்ஸ்டைல் ஆகிய திறனம்சங்களைப் பெற வேண்டும் என்று விரும்பும் மொபைல் ஆர்வலர்களுக்கு இந்த ஃபோல்டு ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.” என்றார்.