கர்நாடகா:பெண்களுக்கு மாதம் ரூ.2000, இலவச பேருந்து பயணம், 200 யூனிட் மின்சாரம்- காங். தேர்தல் அறிக்கை

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும் என்பதும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்.

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்

  • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்
  • அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்
  • வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம்
  • வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி
  • டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500
  • விவசாய கடன் ரூ3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்
  • கர்நாடகாவின் KSRTC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி
  • விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும்
  • சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும்
  • ஆழ்கடல் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்
  • 5 ஆண்டுகளில் ரூ12,000 கோடியில் நீல பொருளாதாரம்
  • மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ6,000 நிதி உதவி
  • பால் மானியம் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்வு
  • மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம்
  • எஸ்சி இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்துவோம்

  • எஸ்டி இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்துவோம்
  • சிறுபான்மையினர் இடஒதுக்கீடு 4% மீண்டும் அமல்படுத்துவோம்
  • லிங்காயத், ஒக்கலிகா இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 9-வது அட்டவணையில் சேர்ப்போம்
  • கர்நாடகா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிப்போம்
  • இரவு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ. 5,000 சிறப்பு ஊக்கத் தொகை
  • தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக கர்நாடகா மாநில கல்வி கொள்கை
  • ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் Bharat Jodo சமூக நல்லிணக்க கமிட்டி உருவாக்கப்படும்
  • 2006-ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
  • பொதுத்துறை பணிகளில் ஊழல் ஒழிப்பு
  • மக்கள் விரோத, நியாயப்படுத்த முடியாத பாஜக அரசின் சட்டங்கள் ஓராண்டுக்குள் விலக்கப்படும்.
  • நாள் ஒன்றுக்கு 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்திக்கு இலக்கு
  • 63 எல்லை வட்டாரங்களிலும் கன்னட மொழி, கலாசார மேம்பாட்டுக்கு நடவடிக்கை


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.