கர்நாடகா: அன்று ‘PayCM’, இன்று ‘CryPM’ – பிரதமர் மோடியை டார்கெட் செய்ய காங்கிரஸின் புது ரூட்!

தென்னிந்தியாவை பொறுத்தவரையில், கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜ.க ஆட்சிக்கட்டிலை தன்வசம் வைத்துள்ளதால், வரும் மே, 10ம் தேதி நடக்கவுள்ள தேர்தல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இதுவரை எந்த மாநிலத்தேர்தலிலும் இல்லாததைப்போல், கர்நாடகா தேர்தலுக்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர், மாறி மாறி ஊழல் புகார்களை முன்வைத்து, ‘ஹைடெக் வார்’ நடத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Pay CM பிரசாரம் Vs சித்து நிஜ கனசுகள்

‘Pay CM’ Vs ‘சித்து நிஜ கனசுகள்’

‘‘கர்நாடகத்தில் பா.ஜ.க அனைத்துப் பணிகளிலும், 40 சதவிகிதம் கமிஷன் பெறுகிறது,’’ என்ற குற்றச்சாட்டை மையப்படுத்தி, ஓராண்டாக, ‘PayCM – பே சிஎம்’ என்ற ‘க்யூ ஆர் கோடு’ ஒன்றை வெளியிட்டு, காங்கிரஸார் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த ‘க்யூ ஆர்’ ஸ்கேன் செய்தால், ஒரு வெப்சைட்டுக்குள் சென்று, “40% Sarkara” என்ற தலைப்பில், பா.ஜ.க ஆட்சியில் நடந்த பல்வேறு துறைகளின் ஊழல்களைப் பட்டியலிட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.கவினர், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா இந்து மதத்துக்கு விரோதமானவர்,” எனச்சித்திரிக்கும் வகையிலும், சித்தராமையா ஆட்சியில் நடந்த மதப்பிரச்னைகள், ஊழல்களை மையப்படுத்தி, எழுத்தாளர் வி.கே.பி எழுதிய, ‘சித்து நிஜ கனசுகள்’ (சித்துவின் நிஜ கனவுகள்) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.

பிரதமர் மோடி

இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு நேரத்தை வீணடிப்பதை விடுத்து, வளர்ச்சிக்காக பாடுபட்டிருந்தால், காங்கிரஸ் கட்சி இப்படி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது,’’ என, பேசியிருந்தார்.

அன்று ‘Pay CM’ – இன்று ‘CryPM’…

இப்படியான நிலையில், இரண்டு நாள்கள் முன்பு, கர்நாடகா வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘‘என் மீது, 91 முறைகேடுகளை பட்டியலிட்டு காங்கிரஸார் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நேற்று, காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ‘CryPM’ என்ற புதிய பிரசாரத்தை துவங்கியுள்ளனர். ட்விட்டரில் ‘CryPM’ மற்றும் ‘Paycm’ போஸ்டர்களை இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் வெளியிட்ட ‘Pay CM’ – ‘CryPM’ போஸ்டர்.

இதற்கு முன்னதாக, கர்நாடகத்தில் ‘ரோடு ஷோ’ சென்ற, பிரியங்கா காந்தி, ‘‘நான் பார்த்ததிலேயே அவர் தான் (பிரதமர் நரேந்திர மோடி) முதல் பிரதமர்; உங்கள் முன்னே வந்து தன்னை மற்றவர்கள் கேவலப்படுத்துவதாகக்கூறி அழும் முதல் பிரதமர்.  உங்கள் பிரச்னைகளை கேட்பதற்கு பதிலாக, அவர் இங்கு வந்து அவரின் பிரச்னைகளைக்கூறி வருகிறார்,’’ என, பேசியுள்ளார்.

தற்போது, பிரதமர் நரேந்திர அழுவது போன்ற படம் கொண்ட ‘CryPM’ போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளதால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கவும், காங்கிரஸை ‘டேமேஜ்’ செய்யவும், பா.ஜ.கவினர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.