அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் காணாமல் போன இரண்டு பெண்களை தேடும் போது, ஒரே வீட்டில் 7 சடலங்கள் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்கள்
அமெரிக்காவின் ஓக்லஹோமாவை சேர்ந்த லிவி வெப்ஸ்டர்(14) மற்றும் பிரிட்டனி ப்ரீவர் ஆகியோர், ஏற்கனவே துஷ்பிரோயக வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெஸ்ஸி மெக்பேர்டன் உடன் பயணம் செய்துள்ளனர்.
@Okmulgee County Sheriff
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிஸார் உடனே தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
@ktul
அப்போது ஜெஸ்ஸி மெக்பேர்டனின் வீட்டில் தேடும் போது, அங்கே ஏழு சடலங்கள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்த ஏழு சடலங்களில் இளம் பெண்களின் சடலமும் இருந்துள்ளது.
துஷ்பிரயோக வழக்கு
ஜெஸ்ஸி மெக்பேர்டன் என்பவர், கடந்த 2003 ஆண்டு முதல் ரக துஷ்பிரயோக வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்தவர். மேலும் அவர் கடந்த 2020 ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
@Oklahoma Department of Corrections
ஏற்கனவே 18 வயதுக்குள் குறைவான ஒருவரை துஷ்பிரோயகம் செய்ய முயன்றது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அவர் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவிருந்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன.
குடும்ப உறுப்பினர்கள் கொலை
இறந்தவர்களில் இரண்டு பெண்களை தவிர மற்றவர்கள் மெக்பேர்டனின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@Okmulgee County Sheriff
“பிரிட்டனி வரும் ஜூலை மாதம் துல்சாவில் நடக்கும் நேஷனல் மிஸ் போட்டிக்காக மிஸ் ஹென்றிட்டாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள், இப்போது அவள் இறந்துவிட்டதால் அவள் அதைச் செய்யப் போவதில்லை. அவள் எங்களை பிரிந்து சென்றுவிட்டாள்.” என பிரிட்டனின் தந்தை வருத்தத்தோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.