கார்த்தியை சந்தித்த ஜப்பான் ரசிகர்கள்
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்த படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்காக அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். இப்போது இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ஜப்பானில் இருந்து இரண்டு ரசிகர்கள் பொன்னியின் செல்வன் 2 பார்பதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கார்த்தியை சந்திக்க வந்துள்ளனர். அவர்களை கார்த்தி நேரில் சந்தித்து போட்டோ எடுத்துள்ளார். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.