தமிழகத்தின் சென்னையில் இளைஞர் ஒருவர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி ஊழியர்
சென்னையை அடுத்த மாதவரத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீராம்(30). தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேளையில், ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
திடீர் மாரடைப்பு
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனால் பதறிப் போன ஸ்ரீராமின் நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஸ்ரீராமை சோதித்த மருத்துவர்கள் அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஸ்ரீராம் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Representative image