டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீரைப் பார்த்து விராட் கோஹ்லி சவால் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது, ‘முடிந்தால் எடுத்துக்கொள்’ என்ற அந்த வீடியோ பிரபலமாகிவருகிறது. RCB பேட்டர் விராட் கோலி மற்றும் LSG அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் லக்னோவில் நடந்த போட்டிக்கு பிந்தைய சண்டைக்குப் பிறகு வைரலாகிவிட்டனர். இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐபிஎல் 2023 போட்டித்தொடரில், திங்களன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore (RCB)) பேட்டர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants (LSG)) ஆலோசர் கவுதம் கம்பீர் இருவரும் வைரலாகி வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே 43வது லீக் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் 120 பந்துகளில் 127 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது.
ஆனால், 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 108 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஆர்சிபிக்கு 5வது வெற்றியாகும்.
ஏப்ரல் 10ம் தேதி பெங்களூரில் நடந்த போட்டியில் லக்னோவிடம் தோல்வி அடைந்த ஆர்சிபி, நேற்றையஆட்டத்தில் பழிதீர்த்து கொண்டது. அதன் பிறகு, டிரஸ்ஸிங் அறையில், விராட் கோலி தெரிவித்த கருத்துக்களின் வீடியோ வைரலாகிவருகிறது.
கோஹ்லி மற்றும் கம்பீர் இருவரும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் லெவல் 2 விதிமீறலுக்காக, அவர்களுக்கு கொடுக்கப்படும் போட்டி கட்டணம் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் ஆர்சிபி கேப்டன், டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் தனது முன்னாள் டெல்லி அணி வீரரையும் விமர்சித்தார்.
ஆர்சிபி அணியினர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ள டிரஸ்ஸிங் அறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், போட்டிக்குப் பிறகு கம்பீரைப் பற்றி கோஹ்லி வெளிப்படையாக பேசுவதைக் காணலாம். “உங்களால் கொடுக்க முடிந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கொடுக்கவே வேண்டாம்” என்று அந்த வீடியோவில் விராட் கோஹ்லி கூறுகிறார்.
ஐபிஎல் 2023 சீசனில் ஆர்சிபிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கம்பீர் பெங்களூரு அணியை நோக்கி காட்டிய செய்கையின் எதிரொலி இன்னும் தொடர்கிறது.
ஆட்டம் முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, எல்எஸ்ஜி பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோஹ்லி இடையே வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோஹ்லியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார்.
காயம் அடைந்த கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா உள்ளிட்ட அவரது வீரர்களுடன் விராட் கோலியை ஆக்ரோஷமாக அணுகிய கம்பீர், அவரைத் தடுத்து நிறுத்தினார். இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட நிலையில், கோஹ்லி, கம்பீரை சமாதானப்படுத்த முயற்சிப்பதைக் காண முடிந்தது, ஆனால், அமித் மிஸ்ரா உள்ளே நுழைந்து இருவரையும் பிரிப்பதற்குள் விஷயம் ரசாபாசமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் ஆர்சிபி பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது என்று கூறும் கோஹ்லி, லக்னோவில், லக்னோ அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது என்பது உண்மையில் நம்ப முடியாத உணர்வு. ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு விரும்பப்படுகிறோம், ரசிகர்கள் நம்மை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது,” என்று RCB வீடியோவில கோஹ்லி கூறுகிறார்..
லக்னோவில் கோஹ்லிக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மகிழ்ச்சி அடைந்தார். “இது விராட்டின் சிறந்த பதிப்பு, அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அதில் ஒரு பகுதியாக இருப்பது அருமை, நாங்கள் நன்றாக செய்தோம் என்று நினைக்கிறேன், மைதானத்தில் விஷயங்களை அமைதியாக வைத்திருப்பதே எனது வேலை,” என்று ஆட்டத்திற்குப் பிறகு டு பிளெசிஸ் கூறினார்.