கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துத் துறைக்கென புதிதாக 27 பேருந்து வண்டிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி 300 மில்லியன் ரூபாவைத் தாண்டுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து வசதி
மக்களுக்கு உயர்தரத்திலான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கோடு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.