வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ரோகிணி ரோகிணி… எங்க இருக்க மா? இதோ அறையில் படுத்து கொண்டிருக்கிறேன் …, குரல் வந்த திசையில் பார்த்தால் , படுக்கையில் சாய்ந்து கொண்டு இருந்தாள் ரோகிணி.
எப்பவும் பரபரன்னு வேலை செஞ்சுகிட்டே இருப்பீயே.. இப்ப என்னடா ஆச்சு? ஏன் உடம்பு சரியில்லை என்று நான் சரமாரியாக கேள்வி கேட்க கடகடகவென்று அழ ஆரம்பித்து விட்டாள்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி எதிர் வீட்டுக்கு தனிக் குடித்தனம் வந்திருந்தாள்.. (இப்போது மூன்று மாதம் விசேஷமாக இருக்கிறாள்)
அவளை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவரை பிடிப்பதற்கு காரணம் எல்லாம் சொல்ல முடியாது அல்லவா! அதனால் எந்த சமையல் செய்தாலும் அவளுக்காக எடுத்து வந்து தருவேன். அப்படித்தான் இன்றும் பூசணி வற்றல் குழம்பும், பீன்ஸ்உசிலியும் வடாமும்.. ரோகினியை பார்க்க வேண்டும் என அடம் பிடித்ததால் செய்த கையோடு சுடச்சுட கண்டெய்னரில் போட்டு எடுத்துவந்து பார்த்தபோதுதான்… நூலறுந்த பட்டம் போல் அவள் படுக்கையில் படுத்திருந்தது என்னை அதிர்ச்சியில் உள்ளாக்கியது.
சற்றே சுதாரித்து அவளை ஆசுவாசப்படுத்தி என்ன நடந்தது?! ஏன் அழறே-ன்னு கேட்க,
ஆன்ட்டி பெரிய விஷயம் எல்லாம் எதுவும் இல்லை ஆன்ட்டி. காலைல ஆபீஸ் வேலையா வெளியே சென்றவர் அரை மணி நேரம் கழிச்சு திரும்பி வந்துட்டாரு. வீட்டுக்கு வந்ததும் ஒரே சண்டை நான் யார் கூடவோ டெலிபோனில் பேசியதாகவும், யாருன்னு கேட்டா சொல்ல மறுப்பதாகவும்என் மேல் குற்றம் சாட்டுகிறார்.
அதற்கு அவர் சொல்லும் காரணம் இருக்கே …அதில் கொஞ்சமும் லாஜிக்கே இல்லை ஆன்ட்டி.
சிறிது நேரத்திற்கு முன் போன் செய்த போது லைன் என்கேஜ்டாக இருந்ததாம். அதனால் நான் யாருடனோ பேசிக் கொண்டு இருந்திருப்பேனாம் அல்லது யாரோடாவது பேச முயற்சித்து டயல் செய்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் ஆன்ட்டி.
“யாருடன் பேசினாய் அல்லது யாருக்கு போனில் பேச ட்ரை பண்ணினாய் என்பதை சொல்ல மறுப்பது ஏன்?” இதுதான் அவருடைய கேள்வி.
நான் அப்போது குளித்துக் கொண்டிருந்தேன் ஆன்ட்டி.. போன் பெல் அடிச்சது காதில் விழுந்தது… எடுப்பதற்குள் கட்டாயிடுச்சு ஆன்ட்டி நான் யாருக்கும் ட்ரை பண்ணல என்று அழுதபடியே சொல்லி.. அவர் கத்த, நான் கத்த எனக்கு ஒரே தலைவலி ஆன்ட்டி என்றாள்.
அப்போது மறுபடி போன் மணி ஒலித்ததாகவும்,. அலுவலகத்திலிருந்து கணவருக்கு வந்ததாகவும்,.போனில் அவரின் மேனேஜர் … “ஏன் ஆபீஸ்க்கு வரல? கால் மணி நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணினேன். ஏன் எடுத்துப்பேசலன்னு? டோஸூம் விட்டார் ஆன்ட்டி..என்றாள்.(எனக்கு புரிந்து போய்விட்டது என்ன பிரச்சனை என்று..)
இது எல்லாம் பெரிய விஷயமேயில்ல ரோகிணி.. இதெல்லாம் ஒரு ஜூஜூபி மேட்டர் .. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன்.
எப்படி ஆன்ட்டி இதை சரி செய்வது என கேட்க,
நீ இப்பொழுது எழுந்து முதலில் சாப்பிடு நான் மாலை வந்து பேசுகிறேன் உன்னவரிடம் என்றேன்.
மாலை அவளின் கணவர் வருவதைப் பார்த்த நான் , சூடாக செய்து இருந்த ரவா கேசரியை ..அந்த தம்பியின் கையில் கொடுத்து சாப்பிடச் சொன்னேன்.
ரோகிணியிடம் சென்று ‘ உங்க வீட்டுக்கு நீ டயல் பண்ணு’ என்றேன். அதே நேரம் அவள் கணவரிடம் அதே நம்பருக்கு டயல் பண்ணச் சொன்னேன் வேறு ஒரு லைனில்.. அவருக்கு எங்கேஜ்டு டோன் தான் வந்தது.
அப்போதுதான் அவருக்கு தன் தவறு புரிந்தது… காலையில் அவர் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு போன் வந்த அந்த நேரத்தில், அவரும் டயல் செய்ததால் எங்கேஜ்டாக ஆக இருந்ததை புரிந்து கொண்டார்.
அப்புறம் என்ன.. ரோகிணியிடம், ஸாரி சொல்ல , அவளோ அதெல்லாம் பரவாயில்லை, ஆன்ட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்ன்னு சொல்ல… எனக்கு எதுவும் தேவையில்லை .
நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருங்கள்.. எந்த விஷயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் ன்னு யோசிக்காமல் பேசிடாதீங்க.
‘ஒரு சொல் வெல்லும்.. ஒரு சொல் கொல்லும்.’
நீங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே உங்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அது மட்டும் அல்லாமல் குழந்தை பிறப்பு என்பது ஒரு வரம்…
கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக பேசி , மகிழ்ச்சியாக சாப்பிட்டு மகிழ்ச்சியை மட்டுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கணும் ன்னு கூற,
கண்டிப்பாக ஆன்ட்டி இந்த தவறு இனிமேல் நடக்காது என்று இருவரும் உறுதியாக சொல்ல… இருவரின் நெற்றிலும் அன்பு முத்தங்களை பரிசளித்து, ரவா கேசரியை நானே வாயில் ஊட்டி விட்டு .. இரவு மசால் தோசை, தேங்காய் சட்னி செய்து எடுத்து வர்றேன்னு கூறி வந்தேன்.
எது எப்படியோ ஒரு குட்டிப் பிரச்சினையை தீர்த்து வைத்த திருப்தி எனக்குள்!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.