திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் – திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5-ம் தேதி -வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. கனியம்பாடி(இரவு 10 மணி), கண்ணமங்கலம் (இரவு 10.17 மணி), ஆரணி சாலை(இரவு 10.34 மணி), போளூர்(இரவு 10.49 மணி), அகரம் சிப்பந்தி(இரவு 11.03 மணி), துரிஞ்சாபுரம் (இரவு 11.15 மணி) வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலை – வேலூர் இடையே மே 5 மற்றும் 6 தேதி -திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. துரிஞ்சாபுரம்(அதிகாலை 4.08 மணி), அகரம் சிப்பந்தி (அதிகாலை 4.19 மணி), போளூர் (அதிகாலை 4.34 மணி), ஆரணி சாலை (அதிகாலை 4.49 மணி), கண்ணமங்கலம் (அதிகாலை 4.54 மணி), கனியம்பாடி (காலை 5.08 மணி) வழியாக வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு சென்றடைகிறது.
விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே மே 5-ம் தேதி -விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. வெங்கடேசபுரம் (காலை 9.29 மணி), மாம்பழப்பட்டு (காலை 9.39 மணி), ஆயந்தூர்(காலை 9.45 மணி), திருக்கோவிலூர் (காலை 9.57 மணி), ஆதிச்சநல்லூர் (காலை – 10.08 மணி), அண்டம்பள்ளம் (காலை 10.14 மணி), தண்டரை (காலை 10.21 மணி) வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. தண்டரை (பகல் 12.57 மணி), அண்டம்பள்ளம் (பகல் – 1.14 மணி), ஆதிச்சநல்லூர் (பகல் 1.19 மணி), திருக்கோவிலூர் (பகல் 1.28 மணி), ஆயந்தூர் (பகல் 1.43 மணி), மாம்பழப்பட்டு (பகல் 1.49 மணி), வெங்கடேசபுரம் (பகல் 1.58 மணி) வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடைகிறது.
விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5-ம் தேதி – விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. வெங்கடேசபுரம் (இரவு 9.29 மணி), மாம்பழப்பட்டு (இரவு 9.39 மணி), ஆயந்தூர்(இரவு 9.45 மணி), திருக்கோவிலூர் (இரவு 9.57 மணி), ஆதிச்சநல்லூர் (இரவு – 10.07 மணி), அண்டம்பள்ளம் (இரவு 10.13 மணி), தண்டரை (இரவு 10.20 மணி) வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே மே 5 மற்றும் 6-ம் தேதி -திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. தண்டரை (அதிகாலை 3.47 மணி), அண்டம்பள்ளம் (அதிகாலை 3.52 மணி), ஆதிச்சநல்லூர் (அதிகாலை 3.57 மணி), திருக்கோவிலூர் (அதிகாலை – 4.10 மணி), ஆயந்தூர் (அதிகாலை – 4.25 மணி), மாம்பழப்பட்டு (அதிகாலை – 4.30 மணி), வெங்கடேசபுரம் (அதிகாலை 4.40 மணி) வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது.
வேலூர் – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சென்னை கடற்கரைக்கும், திருவண்ணாமலை (அதிகாலை 3.30 மணி) – விழுப்புரம் இடையே 4, 5, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.