நவ்ரோஜாபாத், மத்தியப் பிரதேசம் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், அவரது மகளை பா.ஜ.க.வை சேர்ந்த ராகுல் சித்லானி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் எனத் தெரிவித்து உள்ளார். பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராகுல் சித்ரானியை கடந்த ஆண்டு நவம்பரில் […]