சென்னை பாடியில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு..!!

தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை சென்னையின் புறநகர் பகுதிகளான அயப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், பாடி, கொரட்டூர், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

அந்த வகையில் பாடி மீன் மார்க்கெட் அருகே மழை நீர் வடிகால்வாய் பணிக்காக கால்வாய் தோண்டப்பட்டு அந்த இடத்தில் அதிகப்படியான மழை நீர் தேங்கியதில் ராட்சத காட்டுவா மரம் மழையால் சாலையில் சாய்ந்து விழுந்ததில் அம்பத்தூர், பாடி மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முகப்பேர் வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் காலையில் விழுந்த மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு வெட்டி அகற்றினர். மேலும் சாலையில் மரம் விழுந்த இடத்தில் குடைசல் ஏற்பட்டு பள்ளம் விழுந்துள்ளதால், அந்த இடத்தில் தற்காலிகமாக பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.