உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உலகில் உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1993 முதல் மே 3ல் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப் படுகிறது. ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனத்துக்கு ‘யுனெஸ்கோ’ சார்பில் விருது வழங்கப்படுகிறது.
உலகில் எத்தனையோ பத்திரிகைகள்உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர அதன் செயல்பாட்டில் அல்ல. பல்வேறு சூழல்களையும் சமாளித்து, மக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement