தமிழ்நாட்டை அதிர வைத்துள்ள மரணம்!!

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை தலைமை இடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் (ஐ.எஃப்.எஸ்) என்ற தனியார் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் ஒரு லட்சத்திற்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக அறிவித்தது.

அதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தை நடத்தி வந்த அதிபர்கள் தலைமறைவானார்கள்.

அதிர் ஒருவர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (39). என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இவர் நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்திருந்தார். நிறுவனம் மூடப்பட்டதால் கடன் கொடுத்தவர்கள் பிரசாத்திற்கு நெருக்கடி தர ஆரம்பித்தனர். இந்நிலையில் பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் பிரசாந்த் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். பணம் செலுத்திய ஏஜென்ட் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் .

என் மரணத்திற்கு ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.