கன்னியாகுமரி மாவட்டத்தில், வீட்டில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து குடித்ததாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத் தொழிலாளியான டெபு ராய் தனது 3-வது மனைவி வசந்தி பகாடியா உடன் கட்டளைக்குளத்தில் தங்கி செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்தார். சம்பவத்தன்று டெபு ராய் வாங்கி வந்த மதுவை வசந்தி எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து, மனைவியை கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு டெபு ராய் தூங்கச்சென்றுள்ளார்.
காலையில், எழுந்து பார்த்தபோது, மனைவி வசந்தி உயிரிழந்தது தெரிய வந்ததால் அவரது ரத்தம் தோய்ந்த ஆடைகளை மாற்றிவிட்டு, காயங்களில் திருநீறை பூசியுள்ளார். சம்பவம் குறித்து செங்கல் சூளை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் டெபுராயை போலீசார் கைது செய்தனர்