துாக்கு தண்டனைக்கு மாற்று ஆராய மத்திய அரசு முடிவு| The central government has decided to look into alternative punishments

புதுடில்லி,’மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கிலிடுவது வலி நிறைந்த செயல்பாடு. அதனால், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது.

இந்த வழக்கு, மார்ச் ௨௧ல் விசாரணைக்கு வந்தபோது, ‘மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கில் இடுவதைத் தவிர, வேறு மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும்’ என, அமர்வு குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஆராய, மத்திய அரசு நிபுணர் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

‘அந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவர் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்’ என, தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.