தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அறிவித்துள்ள சரத் பவார் பதவி விலகுவதற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை. 1999 இல் NCP உருவானதில் இருந்து அதை வழிநடத்தி வரும் சரத் பவார் மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் மூத்த தலைவராவார். அவருக்குப் பின் கட்சியின் தேசியத் தலைவராக யார் வருவார்கள் என்பதையும், அவரது ராஜினாமா கட்சியின் எதிர்கால வாய்ப்புகளில் […]