ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. 2024 மே மாதம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜூன் 16, 2024 உடன் நடப்பு மக்களவையின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி புதிய அரசு பதவியேற்க வேண்டும். தற்போதைய சூழலில் ஆளும் பாஜக அரசு சில பின்னடைவைகளை சந்தித்து வருகிறது.
பாஜகவிற்கு போட்டி
அதில் அதானி விவகாரம் பெரும் தலைவலியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஏனெனில் அசுர பலத்துடன் விளங்கும் பாஜகவை தோற்கடிக்க இரண்டு, மூன்று அணிகளாக பிரிந்து நிற்பது சரியான வியூகமாக இருக்காது. ஒரே எதிரணி என்பது தான் வெற்றியை பெற்று தரும்.
பி டீம் அரசியல்
ஆனால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமலும், சில ’பி’ டீம்களை களமிறக்கியும் தனக்கு சாதகமாக சூழலை பாஜக கட்டமைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில்
எம்.பி
தெரிவித்துள்ள விஷயம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக சென்னையை அடுத்து ஆலந்தூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
டி.ஆர்.பாலு எச்சரிக்கை
இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய டி.ஆர்.பாலு, வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதாக நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
முன்கூட்டியே தேர்தல்
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருவதற்குள் 6 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தலை கொண்டு வரலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. இதுபற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கான சூழல் உருவாகி வருகிறது. எனக்கு சந்தேகமாக தான் உள்ளது. எனவே திமுகவினர் தற்போதே தீவிரமாக தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி
டி.ஆர்.பாலு பேச்சின் அடிப்படையில் பார்த்தால் வரும் நவம்பர் மாதமே மக்களவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அடுத்த 6 மாதங்கள் தான் எதிர்க்கட்சிகள் தயாராவதற்கு கால அவகாசம் உள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில்
ஒருபுறம் அணி சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பிகார் சென்று நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
கூட்டணி எப்படி?
இதையடுத்து மம்தா பானர்ஜியை நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இதுதவிர நவீன் பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ், ஜெகன் மோகன் ரெட்டி, பினராயி விஜயன் ஆகியோரின் நிலைப்பாடுகள் பற்றி கேள்வி எழுகிறது. தமிழகத்தில் முதல்வர்
தலைமையிலான திமுகவானது காங்கிரஸ் உடன் கைகோர்க்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.