சென்னை: நிலைக் கட்டணம் மீது அபராதம் விதிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின்வழங்கல் விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் வீடுகளுக்கு நிலைக் கட்டணம் மீதான அபராதம் விதிப்பது போன்ற தவறான தகவல்கள் சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.
வீடுகளுக்கு நிலைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து 2022 செப். 10-ம் தேதி முதல் விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நிலைக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்த பின்பு நிலைக் கட்டணம் மீதான அபராதம் என்பது தவறான செய்தியாகும்.
மேற்கண்ட வரைவு விதிகளின் மீது பொதுமக்களின் கருத்துரைகளை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துரைகளை பரிசீலனை செய்து விதிகளின் மீது இறுதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.