உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை உறுப்பினர் அஃப்ஸல் அன்சாரியின் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அம்மாநிலத்தின் காஜிபூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த அஃப்ஸல் அன்சாரி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆட்கடத்தல், கொலை வழக்கில் அஃப்ஸலுக்கு 4 ஆண்டுகளும், அவரது சகோதரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி அஃப்ஸல் அன்சாரி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.