பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் அரண்மனை மைதானத்தில் துப்பாக்கி குண்டுகளை வீசி எறிந்த மர்ம நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.
அவரது முடிசூட்டு விழா வரும் மே 6ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் வைத்து நடைபெற உள்ளது.
CHRIS JACKSON/GETTY
மன்னருடைய இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவருக்கும் இளவரசர் வில்லியம் இதயம் நிறைந்த பாராட்டு உரையை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
மர்ம நபர் கைது
முடிசூட்டு விழாவிற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே உள்ள மைதானத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி குண்டுகளை வீசி எறிந்தார்.
Sky News
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டு பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர், பின்னர் மர்ம நபர் வீசிய சந்தேகத்திற்கு இடமான பொருள் துப்பாக்கி குண்டுகள் என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.
மேலும் அரண்மனை வாசலில் பொருட்களை தூக்கி எறிந்த மர்ம நபரை இரவு 7 மணியளவில் கைது செய்தனர்.
இந்நிலையில், அரண்மனைக்கு வெளியே முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் பெருநகர காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் ஜோசப் மெக்டொனால்ட் பேசிய போது, அரண்மனை வாயிலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், துப்பாக்கி சூடு சம்பவங்களோ அல்லது இதனால் யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.