பிரஜின் நடிக்கும் 'சமூக விரோதி'

'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் ராஜா இயக்கி உள்ள அடுத்த படம் 'சமூக விரோதி'. பிரஜின், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், வழக்கு எண் முத்துராமன் உள்பட பலர் நடி'கிறார்கள். மலாக்கி இசை அமைக்கிறார், ஜிஜூ மோன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குநர் சீயோன் ராஜா கூறியதாவது: சில சமூக விரோதிகள் அரசியல்வாதிகளையும், அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சமூகத்தில் பல நாசகரமான வேலைகளில் புத்திசாலிதனமாக ஈடுபடுகிறார்கள். இந்தச் சமுதாயத்தில் பணத் தேவையுடன் வேலையின்றி, பொருளாதார வறுமை கொண்ட இளைஞர்களை தேடிப் பிடித்து எப்படி அவர்களை தொழில்நுட்பத்திற்குப் பழக்கி சமூக விரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்துகிறார்கள் என்பதை இந்த படத்தின் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளேன்.

“புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம் “என்கிற சிந்தனை முழக்கத்தோடு இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளோம். அறமே இல்லாத மனிதர்களிடம் இந்தச் சமூகம் கருணையை எதிர்பார்க்கிறது, மூளை சலவை செய்பவனிடம் முன்னேற வழி கேட்கிறது இதுதான் இந்த தலைமுறை முரண். கருத்தியல் ரீதியாக நான் வைத்திருக்கும் விவாதத்திற்கு சமூகம் செவி சாய்க்கும் என்றே நம்புகிறோம். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.