வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சித்ரதுர்கா: பிரிவினைவாத அரசியல் செய்யும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம்(மஜத) கட்சிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் முதன்மையான மாநிலமாக மாற கர்நாடகா விரும்புகிறது. பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கை, சிறப்பானது. இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்றுவதற்கான பாதையை அது காட்டுகிறது. நவீன உள்கட்டமைப்புக்கான பாதையை காட்டுவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கவும் வகை செய்கிறது.
காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் வாரிசு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியல் செய்யும் கட்சிகளாக உள்ளன. இக்கட்சிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இக்கட்சிகள் விவசாயிகள் குறித்தும், மாநிலத்தின் வளர்ச்சி குறித்தும் சிந்தித்தது கிடையாது. மாநிலத்தில் பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும். இவ்வாறு மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement