பீட்டர்பால் தனது கணவர் இல்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இருவரது திருமணமும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பலரும் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் காலமானார். இதையடுத்து வனிதாவின் 3ஆவது கணவர் மறைந்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது.
இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வனிதா, மறைந்த பீட்டர் பாலை தாம் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், 2020இல் இருவரும் சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டில் முடிவுக்கு வந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் இல்லை, என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள், நான் சட்டப்பூர்வமாக அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, தற்போது தனிமையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எந்த இழப்புக்கும் வருத்தப்படவில்லை என்று கூறியுள்ள வனிதா, தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு தாழ்மையான வேண்டுகோள், மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என அவர் கூறியுள்ளார்.
newstm.in