புதுச்சேரி அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில், ஐ.டி., பூங்கா உள்பட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அத்துடன், அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் முதற்கட்டமாக 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மட்டுமின்றி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கடந்த காலங்களில் சராசரியாக 300 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்து வந்த சூழ்நிலையில், கடந்தாண்டு 8 மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, 349 நிறுவனங்களில்3169 பேருக்கு வேலைவாய்ப்பினை பெற்று கொடுத்து அசத்தியுள்ளது. இவர்கள் ஆரம்ப சம்பளமாக மாதம்8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் பெற்று சேர்ந்துள்ளனர்.
கசப்பான உண்மை
புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் பலரும் வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் புலம்பிக்கொண்டு இருக்க மற்றொரு பக்கம் தேடி வரும் வேலைக்கு தகுதி இல்லாமல் அவர்கள் இருப்பதும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.
கடந்தாண்டு வந்த 349 கம்பெனிகள் 21,723 பேருக்கு வேலை கொடுக்க நேர்காணலை நடத்தியது. இதில் 22,414 பேர் பங்கேற்று இருந்தாலும், 3169 பேருக்கு தான் வேலை கிடைத்துள்ளது.தேடி வந்த 18,554 வேலைகளை, புதுச்சேரி இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளாமல் வீணடித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
காரணம் என்ன?
தேடி வரும் வேலைகளை புதுச்சேரி இளைஞர்கள் தவிர்ப்பது ஏன் என, தனியார் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளிடம் கேள்வியை முன்வைத்தபோது, ‘இன்றைய வேலைக்கான பயணத்தில் டிஜிட்டல் கல்வியறிவுடன், ஆங்கிலத்தில் பேசும் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன்கள் மிகவும் முக்கியம்.
மலைக்க வைக்கும் மதிப்பெண் பட்டியல், பட்டங்களுடன் வெளியே வரும் புதுச்சேரி இளைஞர்கள் இந்த திறன்களில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.பி.டெக்.,படித்துள்ள இளைஞர்கள் கூட சராளமாக ஆங்கிலத்தில் பேச திணறுகின்றனர்.அடுத்து, சம்பளம்.வேலைக்கான திறன் இல்லாமலேயே எடுத்ததும்,50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர்.
வேலையில் சேர்ந்து, படிப்படியாக திறமை காட்டி உயர்ந்த சம்பளத்தை பெற அவர்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் கிடைக்கும் வேலையில் சேராமல் தவிர்க்கின்றனர். புதுச்சேரி இளைஞர்களின் இன்னொரு பிரச்னை ேஹாம்சிக். புதுச்சேரியை தாண்டி வேலை செய்ய விரும்பவில்லை.
சென்னை, பெங்களூரு போன்ற வெளியூர்களுக்கு சென்று பணிபுரிய புதுச்சேரி இளைஞர்கள் தயாராக இல்லை. புதுச்சேரியிலேயே திருபுவனையில் வேலை கிடைத்தால் கூட சேர மறுகின்றனர்.இது விசித்திரமாக உள்ளது. இந்த விஷயங்களை சரி செய்தால்,கடந்தாண்டு இன்னும் ஆயிரக்கணக்கான புதுச்சேரி இளைஞர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்து இருக்கும் என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்