தெற்கு மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பணியாளர்கள் 3 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபோன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ‘எம்.டி பாப்லோ’ என்ற எண்ணெய் கப்பல், 28 பணியாளர்களுடன் சீனாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திங்கட்கிழமை மாலை மலேசியாவின் Tanjung Sedili கடற்பகுதியில் சென்ற போது, கப்பலில் தீடிரென தீப்பற்றி கரும்புகை எழுந்தது.
தகவலறிந்த மலேசிய கடலோர காவல்படையினர், ரோந்து படகில் சென்று 25 பணியாளர்களை மீட்டனர். எஞ்சிய 3 பேரை தேடும் பணிகள் தொடரும் நிலையில், தீ விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.