
மீண்டும் க்ரிஷ் அவதாரம் எடுக்கிறாரா ஹிரித்திக் ரோஷன்?
நடிகர் ஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரையுலகில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடித்து கடைசியாக வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. விரைவில் வார் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இப்போது முடிவு செய்துள்ளாராம் ஹிரித்திக் ரோஷன்.
அதன்படி, வார் 2 படத்தை முடித்தவுடன் க்ரிஷ் படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தை அக்னி பாத் படத்தின் இயக்குனர் கரண் மல்ஹோத்ரா இயக்குகிறார். இப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.