வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொதுத்துறை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி வீட்டில் சி.பி.ஐ, ரெய்டு நடத்தி ரூ. 20 கோடி பணத்தை பறிமுதல் செய்தது.
வாப்கோஸ் எனப்படும் வாட்டர் அன்ட் பவர் கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக (சி.எம்.டி.) மேலாளராக ராஜேந்திர குமார் குப்தா இருந்தார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து இன்று ராஜேந்திர குமார் குப்தாவிற்கு சொந்தமான டில்லி, சண்டிகர், பஞ்ச்கோலா, குர்கான், காஸியாபாத் உள்ளிட்ட 19 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 20 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement