மெக்சிகோவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து குன்றின் கீழ் இருந்த பள்ளதாக்கிற்குள் விழுந்ததில் 18 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கவிழ்ந்த பேருந்து
மெக்சிகோவின் நயாரிட்டில் சுற்றுலாத் தலமான புவேர்ட்டோ வல்லார்ட்டா மற்றும் டெபிக் ஆகிய பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது, மேலும் குன்றின் கீழ் இருந்த 15 மீட்டர் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
18 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த 11 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 33 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
33 பயணிகளில் 11 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
இதற்கிடையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.