ம.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை – திருப்பூர் துரைசாமி..!!

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் வாரிசு அரசியலை கண்டித்தும், ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த துரைசாமி முயற்சிக்கிறார் என்று பதிலடி கொடுத்தார்.

இது ம.தி.மு.க. மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ம.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகமான எம்.எல்.எப். அலுவலகத்தில் மே தினவிழாவையொட்டி அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

பின்னர் துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது,  

பொதுச்செயலாளர் வைகோவுக்கு இதுவரை 6 கடிதங்கள் எழுதி உள்ளேன். ஆனால் இதுவரை எந்த கடிதங்களுக்கும் பதில் வரவில்லை. வைகோவுக்கு மட்டுமே நான் பதில் சொல்லுவேனே தவிர வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. கட்சியில் நடந்த தேர்தல் அனைத்தும் பினாமி தேர்தலாகவே நடந்துள்ளது. சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை. ம.தி.மு.க. கட்சி தற்போது பலவீனப்பட்டுள்ளது. ம.தி.மு.க. என்ற கட்சிக்கு எதிர்காலமே இல்லை. எனவே இப்போதே தி.மு.க.வுடன் இணைத்து விட்டால் கட்சியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். பெரியார், அண்ணா கொள்கைளை வலியுறுத்த பாடுபடுவேன். தற்போது வரை ம.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளேன். புதிய கட்சி தொடங்கவோ, வேறு எந்த கட்சியில் சேரும் எண்ணமோ எனக்கு இல்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பேன். தற்போது எந்த அரசியல் கட்சியிலும் நியாயத்தை பேச முடியவில்லை. பேசினால் எதிர்ப்பு வருகிறது என கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.