அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி Hemant Prachchhak, சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனயின் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். மேல்முறையீட்டு மனு மீதான இறுதித் தீர்ப்பை கோடை விடுமுறை முடித்து அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.