திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தை பொறுத்தவரை உணவு மற்றும் கூட்டுறவுத் துறை என்பது உயிர் நாடி போல. நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை கொள்முதல் செய்கிறோம். இதேபோல் மற்ற பொருட்களையும் கொள்முதல் செய்து 2.23 கோடி குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம்.
நெல் கொள்முதல்கடைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை 35,941 இருக்கின்றன. செப்டம்பர் 2022 முதல் தற்போது வரை 35.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.14 லட்சம் கூடுதல் என்பது கவனிக்கத்தக்கது. 4.41 லட்சம் விவசாயிகளுக்கு 7881.90 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கடன்11 ஆயிரம் விவசாயிகளுக்கு 140 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. இது அடுத்த மூன்று, நான்கு நாட்களில் விநியோகம் செய்து விடுவோம். எனவே வேளாண் துறை செழிப்பாக இருந்தால் தான், மற்ற துறைகள் சிறப்பாக செயல்பட முடியும். இதை ஊக்குவிக்கும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் 13,442 கோடி ரூபாய் வேளாண் கடன் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வேளாண் கடன் உள்ளிட்ட 18 வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறு தானிய ஆண்டுபல்வேறு கூட்டுறவு வங்கிகள் மூலம் 82.15 லட்சம் பேருக்கு 68,495 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான அடிப்படை கட்டுமானங்களை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டை சிறு தானிய ஆண்டு என்று ஐ.நா உலக உணவு திட்டம் அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசு தரப்பிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளில் கேழ்வரகுமுதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி உடன் ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதேபோல் அனைத்து வகையான சிறுதானிய உணவுப் பொருட்களும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். இவற்றை தரமான முறையில் ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
கருப்பு கவுனி அரிசிமுதலில் கேழ்வரகு, அதன்பிறகு கம்பு, சோளம் என பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. இதன் உற்பத்தி திறன் விவசாயிகள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது. இதற்கான ஆரோக்கியமான சூழல் மற்றும் விற்பனை வாய்ப்புகளை எடுத்துரைத்து உற்பத்தி மேம்படுத்தப்படும். இந்த பட்டியலில் கருப்பு கவுனி அரிசியும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு நடவடிக்கைசுகாதாரத்துறை, உணவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும். கால்நடைகளுக்கு 1,500 கோடி ரூபாய் கடன் நடப்பாண்டு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் மேலும் எளிமைப்படுத்தப்படும்.
சம்பள உயர்வுரேஷன் கடைகளை பொறுத்தவரை 5,784 கடைகளை புதுப்பித்து ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றுவிட்டோம். நடப்பாண்டு மேலும் 5,000 கடைகள் புதுப்பிக்கப்படும். கடைகள், குடோன்களில் கழிவறை வசதிகள் செய்து தரப்படும். ரேஷன் கடை ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.