லண்டன் சாலையில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞரை கைது செய்த பொலிஸார்


பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் இளம்பெண் ஒருவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம்பெண் கொலை

 பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் 33 வயது மதிக்கத்தக்க அந்நியர் ஒருவர் பின்னால் இருந்து கத்தியால் குத்தி தாக்கியதில் 31 வயதுடைய பெண் ஒருவர் நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார்.

பிரிக்ஸ்டனில் உள்ள ஸ்டாக்வெல் பார்க் வாக்கில் திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பிறகு பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்கப்பட்டு விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர், ஆனால் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட நபர்

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மெட் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், பாதிக்கப்பட்ட நபரும், கைது செய்யப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று கூறுவதற்கு தற்போது எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

லண்டன் சாலையில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞரை கைது செய்த பொலிஸார் | Uk Woman 31 Killed In Brixton

துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் செப் அட்ஜெய்-அடோஹ் வழங்கிய தகவலில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்க சிறப்பு அதிகாரிகள் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் சிசிடிவியை ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.