தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் பேறு கால நிதி உதவி தாமதமாகி உள்ளது குறித்து பேசியிருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.
தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கர்ப்பகால நிதி உதவி தாமதமாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியிருப்பதாகவும் விரைவிலேயே நிதியுதவி கிடைத்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் விரைவிலேயே நிதியுதவி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவிலேயே இந்த உதவி கிடைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக உறுதியளித்தார்.
முதல் இரண்டு குழந்தைகளை பெறும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால நிதி உதவியாக தமிழக அரசு 12000 ரூபாய் முதல் 18000 ரூபாய் வரை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.