QR குறியீட்டின் ஊடாக எரிபொருளை வழங்கும் முறை விரைவில் இடைநிறுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எரிவாயு விலை குறைப்பு
மேலும், எரிவாயுவின் விலையும் குறையும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் இன்று காலை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 12.5, 05 மற்றும் 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may like this Video