ரெனால்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான கிகர் RXT(O) வேரியண்டின் விலை ₹ 26,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வேரியண்ட் ₹ 8.25 லட்சம் முதல் ₹ 10.68 லட்சம் வரை கிடைத்து வந்தது.
முன்பே பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான RDE விதிகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய கிகர் RXT(O) வேரியண்டில் 16 அங்குல அலாய் வீல், 8.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் RXZ டிரிமில் வழங்கப்பட்டிருந்த முழுமையான எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்-லேம்ப் கொண்டுள்ளது.
2023 Renault Kiger
கிகர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.
1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
கிகர் காரில் RXE, RXT, RXT(O) மற்றும் RXZ என நான்கு விதமான வேரியண்டுகள் பெற்றுள்ளது. முன்னதாக பிப்ரவரி 2023 மாதம் ரெனால்ட் தனது அனைத்து மாடல்களையும் புதிய RDE விதிமுறைகள் மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற அம்சங்களுடன் அனைத்து மாடல்களில் ESC, டிராக்ஷன் கன்ட்ரோல், TPMS மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
கிகர் காரின் விலை ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரையில் உள்ளது. பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட், மற்றும் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.