சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு படம் இயக்கும் வாய்ப்புகளே கிடைக்காத நிலை உருவாகி விட்டது.
அஜித், விஜய் என டாப் ஹீரோக்களை இயக்கி வந்த ஏ.ஆர். முருகதாஸுக்கா இந்த நிலைமை என ரசிகர்களே ஷாக் ஆகி உள்ளனர்.
சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர். முருகதாஸ் என தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டு வருவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
பிளாக்பஸ்டர் இயக்குநர்: தீனா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வரிசையில் அமர்ந்திருந்த ஏ.ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளாக இண்டஸ்ட்ரியில் இருந்தே காணாமல் போய் விட்டார்.
மகேஷ் பாபுவை வைத்து அவர் இயக்கிய ஸ்பைடர், ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்பார் உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், முன்னணி நடிகர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
பட வாய்ப்புகளே இல்லை: முன்னணி இயக்குநராக வலம் வந்த ஏ.ஆர். முருகதாஸ் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கதை திருட்டு சர்ச்சை, பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்தித்தது என அடுத்தடுத்து சிக்கலில் சிக்கிய நிலையில், ஏ.ஆர். முருகதாஸின் மார்க்கெட் முற்றிலுமாக டவுன் ஆகி விட்டது.
ஆனாலும், கம்பேக் கொடுக்க வெறித்தனமாக காத்திருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
சிவகார்த்திகேயன் சிக்கவில்லை: சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்திற்கே ஏ.ஆர். முருகதாஸ் தான் கதை எழுதி இருந்தார். அப்போதே சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவேன் என சொல்லி இருந்தார். அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்து இருந்தார்.
சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்தி நடித்த ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் படம் இப்போதைக்கு தொடங்காது என்றே தகவல்கள் வெளியாகின்றன.
மாவீரன் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் 7 மாதங்கள் ஆகும் என்கின்றனர்.
அல்லு அர்ஜுனை இயக்க முடிவு: இந்நிலையில், ஷங்கர், வெங்கட் பிரபுவை போல டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் பண்ணி விட்டு சிவகார்த்திகேயன் படத்தை பண்ணலாம் என்கிற முடிவில் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், புஷ்பா 2 படத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனை பார்த்து கதை சொல்லி உள்ள ஏ.ஆர். முருகதாஸுக்கு இன்னும் ஒரு மாதத்தில் நல்ல செய்தி சொல்றேன் என அல்லு அர்ஜுன் சொல்லி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே மகேஷ் பாபு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள நிலையில், அல்லு அர்ஜுனும் அவர் இயக்கத்தில் நடிப்பார் என்றும் அதன் பிறகே சிவகார்த்திகேயன் படம் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.