தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார். இனிமேல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.தான் எழுதிய ‘லோக் மாஜே சங்கதி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் இதனை அறிவித்தார்.
சரத் பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து, அவரே தலைவராகத் தொடர வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பிவருகின்றனர்.