#BREAKING | திராவிட மாடல் அரசின் சாதனை! தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் பொதுக்கூட்டம் – அதிரடி அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி, தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றள்ளது.

இந்த நிலையில், அரசு ஊழியர் – ஆசிரியர் – மாணவர் – மகளிர் – கழனியில் பாடுபடும் உழவர் – ஆலையில் உழைக்கும் தொழிலாளி – மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், கழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுகவின் தலைமை கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்க பொதுக்கூட்டங்கள் வருகின்ற மே 7 ,8 ,9 ஆகிய தேதிகளில், தமிழகம் முழுவதும் 1222 இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கண்ட்ரோன்மென்ட் நகரில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்ற உள்ளதாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.