ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் வரும் மே 11 முதல்
Google நிறுவனத்தின் Pixel 7a
ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனை செய்யப்பட்டுவரும் Pixel 6a ஸ்மார்ட்போனின் அடுத்த ஜெனெரஷன் மாடலாக வெளியாகும்.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Flipkart மூலமாக மே 11 பிறகு விற்பனை செய்யப்படும் என்று Google நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய கலர் ஆப்ஷன்களுடன் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில்
Google நிறுவனத்தின்
Tensor Chip இடம்பெறும் என்றும், இதில் 8GB RAM மற்றும் 128GB UFS 3.1 ஸ்டோரேஜ் வசதி இருக்கும் எனவும் தெரிகிறது. அளவு பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6.1 இன்ச் முழு HD+ OLED ஸ்க்ரீன் வசதி, 90HZ refresh rate கொண்டிருக்கும்.
கேமரா வசதிகளாக இதில் டூயல் கேமரா வசதி இடம்பெறும் எனவும் அதில் OIS (Optical Image Stabilization) வசதி இடம்பெறும் என்றும் தெரிகிறது. முக்கிய கேமரா வசதியாக இதில் 12MP மற்றும் ஒரு அல்ட்ரா வைட் கேமரா இடம்பெறும். இதன் முன்பக்கம் 10.8MP செல்பி கேமரா வசதி இடம்பெறும்.
இதில் 4400mAh பேட்டரி வசதி, 20W பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இருக்கும். இதன் விலை 450 முதல் 500 டாலர் (இந்திய ரூபாயில் 32 ஆயிரம் முதல் 40 ஆயிரம்) விலையில் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்