லக்னோ ஏகானா மைதானத்தில் நடந்த சமீபத்திய சண்டை, இதேபோன்ற பல கள சண்டைகளை அசைபோட வைத்துவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு இது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசர் கவுதம் கம்பீர் இருவருக்குமான வாக்குவாதம் வைரலாகும் நிலையில், இதுபோன்ற சண்டைகள் முதல்முறையல்ல என்று சொல்லி, இதற்கு முந்தைய சண்டைகளைப் பற்றி ரசிகர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.
விராட் கோலி, கவுதம் கம்பீர் இருவருடன் இதுபோன்ற சண்டையில் போட்டிப்போடும் பிற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளனர். யாருக்கும் எவருக்கும் சண்டை? எந்தப் போட்டியில் சண்டை, அபராதம் விதிக்கப்பட்டதா, இல்லை மன்னிப்புக் கோரப்பட்டதா? ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டைகள் சிலவற்றைப் பார்ப்போம்.