Kamal Haasan: இதுக்கே தனி துணிச்சல் வேண்டும்… பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டிய கமல்!

பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 3000 திரைகளில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் டிவிஸ்ட்டுகளுடன் நிறைவடைந்ததால் இரண்டாம் பாகம் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Nayanthara: கழுத்தில் தாலி செயின் மட்டும்தான்.. காட்டன் சுடிதாரில் கெத்துக் காட்டிய நயன்தாரா… லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலேயே இரண்டாவது பாகமும் இருந்ததால் படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ஸ்க்ரீனில் கொண்டு வருவதே பெரும் வேலை. அந்த கதாப்பாத்திரங்கள் பொருத்தமான தேர்வாக இருக்க வேண்டும்.

அதை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் மணிரத்னம். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அப்படியே பொருந்துவதாகவும் அவர்களின் பர்ஃபாமன்ஸும் அசத்தலாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். அதேபோல் பொன்னியின் செல்வன் நாவலில் இல்லாத சில சுவாரசிய காட்சிகளையும் சேர்த்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்தாலும் மறுபக்கம் இதுதான் மணிரத்னத்தின் ஸ்டைல் என பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

Nayanthara: மேக்கப்பே இல்ல… சிம்பிள் லுக்கில் மும்பை ஏர்போர்ட்டில் க்ளிக்கான நயன்தாரா!

தனது கனவு புராஜெக்ட்டான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெற்றிகரமாக கொடுத்துவிட்டார் மணிரத்னம். படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர்
கமல்ஹாசன்
பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்து ரசித்துள்ளார் கமல்ஹாசன்.

Vadivelu: மாமன்னன் படத்தில் வடிவேலு கதாப்பாத்திரம் இவ்வளவு கொடூரமானதா? மாரி செல்வராஜ் கொடுத்த ஹின்ட்!

படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டி பேசியுள்ளார். அதில் கருத்து வேறுபாடுகள் அனைத்து படைப்புகளிலும் இருக்கும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், எல்லா படங்களுக்கும் மாற்று கருத்துக்கள் வரும் என்று கூறியுள்ளார். அது இந்த படத்தில் இருந்தாலும் கூட, மக்கள் இதனை பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும் என்றும் அதை எடுத்து முடித்திருக்கும் வீரனாக இருக்கும் இயக்குநர் மணிரத்னத்தையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தையும் , படக் குழுவினர் என அனைவரையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Karthi: ரஜினிக்கு பிறகு நம்ம வந்தியதேவன் கார்த்திக்குதான் அந்த பெருமை… என்ன மேட்டருன்னு பாருங்க!

மேலும் மணிரத்னம், தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் படத்தை பார்த்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.