உலக நாயகன்
கமல்ஹாசன்
தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி தைவான், தென் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்றது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
Nayanthara: கழுத்தில் தாலி செயின் மட்டும்தான்.. காட்டன் சுடிதாரில் கெத்துக் காட்டிய நயன்தாரா… லேட்டஸ்ட் போட்டோஸ்!
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் நாயகன் படம் வெளியானது. அதனை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் 234 வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங் ‘ராஜ் கமல்’ மற்றும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Nayanthara: மேக்கப்பே இல்ல… சிம்பிள் லுக்கில் மும்பை ஏர்போர்ட்டில் க்ளிக்கான நயன்தாரா!
மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அல்லது நயன்தாராதான் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கமலின் 234 வது படத்தில் நயன்தாராவும் இல்லை, த்ரிஷாவும் இல்லை. பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலான் ஹீரோயின் என தகவல் பரவி வருகிறது.
வித்யா பாலன் ஏற்கனவே அஜித்தின் ர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். தற்போது கமலின் 234 வது படத்தில் வித்யா பாலன் நடிப்பது உறுதியானால் அது அவருடைய இரண்டாவது தமிழ் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் கமல் 234 படத்திற்கான வேலையை இயக்குநர் மணிரத்னம் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கமல் 234 படத்திற்கு புரமோ இம்மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக படம் மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Karthi: ரஜினிக்கு பிறகு நம்ம வந்தியதேவன் கார்த்திக்குதான் அந்த பெருமை… என்ன மேட்டருன்னு பாருங்க!
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படத்தின் கதையை கேட்ட நடிகர் கமல்ஹாசன் தனது கதாப்பாத்திரத்தை 20 நிமிட காட்சியாக உயர்த்தக்கோரி லோகேஷ் கனகராஜிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Trisha: பிரம்மாண்டம்… பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட த்ரிஷா… குவியும் லைக்ஸ்!