விஜய் நடிப்பில் தற்போது ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப்படம் கோலிவுட் வட்டாரத்தினர் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லியோ’ பட அப்டேட் குறித்து கேட்கும் போதெல்லாம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அதுக்குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் லியோ குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
விஜய் நடிப்பில் கடைசியாக ‘வாரிசு’ படம் ரிலீசானது. கடந்த பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருந்தது. இந்தப்படத்துடன் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியாகியிருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசானது. வாரிசு, துணிவு படங்களின் வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘வாரிசு’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமிட் ஆனார் விஜய். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகியிருந்தது. வசூல் ரீதியாக வரவேற்பை இந்தப்படம் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இதனையடுத்து தற்போது இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது.
‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் உருவாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குனர் மிஷ்கின், ‘லியோ’ படத்தில் சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஆனா இன்ட்ரஸ்டிங் கேரக்டர். 20 வருஷத்துக்கு அப்புறம் விஜய்யோட வொர்க் பண்றேன்.
VidaaMuyarchi: மீண்டும் ‘அந்த’ செண்டிமென்ட்டை கையிலெடுத்த ஏகே: நள்ளிரவில் வெளியான அதிரடி அறிவிப்பு.!
விஜய் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு. 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருந்தார். அதே அன்பு அவரிடம் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. லோகேஷ் ஸ்வீட்டான பையன். விஜய்யும், லோகேஷும் இணைந்த பிறகு ஆக்ஷன் இல்லாம இருக்குமா. படம் நல்லாருக்கும் என தெரிவித்துள்ளார். ‘லியோ’ படம் குறித்து மிஷ்கின் அளித்துள்ள இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது.
‘லியோ’ படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜய், திரிஷா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தக்கட்ட ஷுட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
AK 62: ‘ஏகே 62’ அறிவிப்பு வந்தாச்சு.. காத்திருப்புக்கு கிடைச்ச வேறலெவல் ட்ரீட்.!