இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவியை நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் கேட்ட அலறல்
தமிழகத்தின் பொள்ளாச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவி சுப்புலட்சுமி என்ற பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 2ஆம் திகதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து சத்தம் கேட்ட இடத்திற்கு வந்த பொதுமக்கள் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
@gettyimages
இதனை தொடர்ந்து பொதுமக்கள் உடனே பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளம்பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இளம்பெண் கொலை
இந்நிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில் இளம்பெண்ணின் ஆண் நண்பர் சுஜய்(30) என்பவர் தான் கொலைக்கான காரணமென என தெரிய வந்துள்ளது.
@hindu
கேரளாவை சேர்ந்த சுஜய் கர்ப்பமாக உள்ள தனது மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் வீட்டில் தங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை சந்திக்க சுப்புலட்சுமி சுஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
@gettyimages
அவர்களிடையே நடைபெற்ற திடீர் சண்டையில் சுப்புலட்சுமி பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சுஜய் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து குற்றவாளியான சுஜய் கேரளா என தெரிய வந்துள்ளது. உடனே பொலிஸார் கேரள மாநிலம் பாலக்காட்டை நோக்கி விரைந்துள்ளனர்.
மேலும் இளம்பெண் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.