அடுத்தடுத்து.., 8 பைக்குகளை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பேஸன் பிளஸ், பேஸன் எக்ஸ்புரோ, எக்ஸ்ட்ரீம் 200S 4V, கரீஸ்மா 210 XMR  மற்றும் ஜூம் 125 ஸ்கூட்டர் ஆகிய 5 மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது.

நாம் ஏற்கனவே பிரத்தியேகமாக பேஸன் பிளஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V என இரு பைக் வருகை குறித்தான படங்களை வெளியிட்டிருந்தோம். இந்த மாடல்களை தவிர ஹீரோ ஹார்லி கூட்டணியில் உருவாகின்ற 400cc+ என்ஜின் பெற்ற அட்வென்ச்சர் பைக்கினை ஹீரோ நிறுவனமும், ஹார்லி-டேவிட்சன் ரோட்ஸ்டெர் HD4XX மாடலை வெளியிடும்.

2023 Hero Passion Plus

டீலர்களை வந்தடைந்துள்ள புதிய ஹீரோ பேஸன் பிளஸ் 100cc பைக்கின் தோற்ற அமைப்பு முன்பாக நிறுத்தப்பட்ட மாடலை போன்றே அமைந்து பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளது. இந்த பைக்கில் 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100, டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்குகளுக்கு போட்டியாக வரவுள்ள 2023 ஹீரோ பேஸன் பிளஸ் விலை ₹ 68,000 என துவங்கலாம்.

2023 Hero Passion XPro

விற்பனையில் இருந்து நீக்கப்பட்டிருந்த பேஸன் எகஸ்புரோ பைக் மாடலை மீண்டும் ஹீரோ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பேஸன் எக்ஸ்டெக் பைக்கின் வசதிகளை பெற்று கூடுதலாக பெட்ரோல் டேங்க் பகுதியில் நீட்டிக்கப்பட்ட எக்ஸ்டென்ஷன் பெற்றதாக விளங்கும்.

113.2cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9.02bhp at 7,500rpm மற்றும் 9.79Nm at 5000rpm-ல் டார்க் வெளிப்படுத்தும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். 2023 ஹீரோ பேஸன் Xpro Xtech விலை ₹ 72,000 என துவங்கலாம்.

2023 Hero Xtreme 200S 4V

சமீபத்தில் டீலர்களுக்கான நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலில் 199.6cc அதிகபட்சமாக 8500rpm-ல் 19.1 hp குதிரைத்திறன் மற்றும் 6500Rpm-ல் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

2023 Hero Karizma 210 XMR

லெஜென்டரி மாடலாக விளங்கும் கரீஸ்மா பைக்கினை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கில் ஹீரோ கரீஸ்மா 210 மற்றும் ஹீரோ கரீஸ்மா 210 XMR என இரு பெயரைகளை பதிவு செய்துள்ளது. இந்த புதிய பைக்கில் 210cc என்ஜின் பொருத்தப்பட்டு கூடுதலான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும்.

இந்த கரிஷ்மா 210 பைக் செமி ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாகவும், பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக விளங்கும். பைக்கின் விற்பனை ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.

2023 Hero Xtreme 160R

தற்பொழுது சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட வருகின்ற புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக்கின் டிசைன் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் சில மாற்றங்களை பெற்றதாக வரக்கூடும். புதிய மேம்பட்ட 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்ட அதிகபட்சமாக 15.2 PS பவர், 14 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய 160R சிறப்பான மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R மாடல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியாகலாம். மேலும் 200R மாடலும் எதிர்பார்க்கலாம்.

Hero Xoom 125

110cc சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஜூம் ஸ்கூட்டரின் வெற்றியை தொடர்ந்து இதன் அடிப்படையான 125cc என்ஜின் கொண்ட ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரை பல்வேறு வசதிகளுடன் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

மேலும், ஜூம் 125 ஸ்கூட்டரில் சற்று கூடுதலான வசதிகள் மற்றும் சில டிசைன் மாறுபாடுகளை பெற்றதாக விற்பனைக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வரக்கூடும்.

Hero-Xoom-Colours

ஹீரோ-ஹார்லி பைக்குகள்

சோதனையின் இறுதிகட்டத்தில் உள்ள ஹார்லி-டேவிட்சன் HD 4XX பைக்கில் ஏர்-ஆயில் கூல்டு  440cc என்ஜினாக இருக்கும், இந்த புதிய என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கியிருக்கலாம்.

அலாய் வீல் முன்பக்கத்தில் 18-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் கொடுக்கப்பட்டு  சீயட் ஜூம் க்ரூஸ் 140 டயர்களைக் கொண்டுள்ளது. புதிய ஹார்லி-டேவிட்சன் HD 440 பைக் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்திருக்கலாம். பைக்கின் விற்பனை தீபாவளிக்கு முன்பாக துவங்கலாம்.

ஹீரோ XPulse 400

ஹீரோ XPulse 400 சாலைகளில் சோதனை செய்யப்பட்டதில் இருந்து, மோட்டார்சைக்கிளில் இரண்டு வேரியண்ட்கள் இருக்கும் என்பதையும், 40PS மற்றும் 40Nm டார்க் வெளிப்படுத்தும் அளவுக்கு என்ஜின் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 2.70 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில்  ஆண்டின் பிற்பாதியில் அறிமுகப்படுத்தலாம். KTM 390 அட்வென்ச்சர் மற்றும் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நேரடியான போட்டியாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.