நியூயார்க்:
மனிதன் இறக்கும் தருவாயில் அவனது மூளையில் மிக பிரகாசமான வெளிச்சம் தோன்றுவதாகவும், அடுத்து சில மாயத்தோற்றங்களும், நெருக்கமனவர்களின் முகங்களும் கண் முன்னே பயாஸ்கோப்பில் பார்ப்பது போல வந்து செல்லும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
உலகில் ஜனனிக்கும் எந்தவொரு உயிரும் ஒருநாள் நிச்சயம் மரணித்துதான் ஆக வேண்டும். இதில் யாரும் விதிவிலக்கு அல்ல. இதுதான் இயற்கையின் விதி. இவ்வாறு ஒரு மனிதன் மரணம் அடையும் போது அவனுக்கு என்னென்ன விஷயங்கள் தெரிகின்றன.. எதை எதை உணர்கிறான் என்பதை தெரிந்துகொள்வதில் விஞ்ஞானம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பான ஆராய்ச்சி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இதில் பல விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. குறிப்பாக, நவீன மருத்துவம் வந்த பிறகு இந்த ஆராய்ச்சியில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்பொழுது விஞ்ஞானிகளுக்கு பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, ஒரு மனிதன் இறப்பதற்கு முன்பு சில நொடிகளும், இறந்ததற்கு பிறகு சில நொடிகளும் அவனது மூளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக செயல்படுகிறதாம். உதாரணமாக, ஒரு சூப்பர் ஃபாஸ்ட் கம்யூட்டரை விட அவனது மூளை வேகமாக செயல்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அப்போது அவர்கள் பல விஷயங்களை பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
குகைக்குள் ஒரு வெளிச்சம்:
உதாரணமாக, உலகம் முழுவதும், மரணத்தில் இருந்து நூலிழையில் மீண்டு வந்தவர்கள் பெரும்பாலானோர் ஒரு விஷயத்தைதான் பொதுவாக சொல்கின்றனர். அதாவது, ஒரு இருட்டான குகை அல்லது சுரங்கத்தில் அவர்கள் நடந்து சென்றதாகவும், அந்தக் குகையின் முடிவில் கண்கூசும் அளவுக்கு ஒரு வெளிச்சமான பகுதி தெரிந்ததாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். அந்த வெளிச்சத்துக்குள் அடி எடுத்து வைக்கும் முன்பு நினைவு திரும்பியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும், மாரடைப்பு ஏற்பட்டவர்கள், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆபத்தான கட்டத்துக்கு செல்பவர்கள் உயிர் பிழைத்த பின்பு, மேற்கூறிய விஷயங்களை தான் பொதுவாக கூறுவார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி:
ஒருவேளை, அந்த வெளிச்சத்தில் கால் எடுத்து வைத்துவிட்டால் அவர்களை காப்பாற்ற முடியாதோ என்று விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்து வந்தனர். தற்போது அந்த விஷயத்தில்தான் ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மிக்கிகான் மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், கோமாவால் பாதிக்கப்பட்ட 2 நபர்களின் மரணிக்கும் தருவாயை ஆராய்ச்சி செய்தனர். இதற்காக அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் அவர்களின் சுவாசக் கருவி அகற்றப்பட்டது.
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தங்கராஜ்.. கடைசியாக ‘கமகம’ பிரியாணி.. கையில் வைத்திருந்த குடும்ப போட்டோ!
மூளையில் தோன்றும் காமா கதிர்கள்:
அப்போது அவர்களின் மூளையின் மையப்பகுதியில் ஒருவித காமா கதிர்கள் (Gamma Rays) உருவாகியுள்ளன. பின்னர் சிறிது சிறிதாக அவை விரிவடைந்து, மூளையின் இரண்டு பகுதிகளுக்கும் இடையே ஒரு பெரிய மின்சார அலைகளை போல உருவெடுக்கிறது. இந்த நேரத்தில்தான் அந்த நபர்களின் உயிர் பிரிகிறது. அவர்கள் இறந்த பிறகும் சில நொடிகள், (சராசரியாக 7 நொடிகள்) அந்த கதிர்கள் மறைந்து விடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
ஸ்லைடுகளாக ஓடும் சம்பவங்கள்:
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகத்தில் மரணிக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களிடம் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் போது, பலர் பெரு வெளிச்சத்தை தாங்கள் பார்ப்பதாகவும், அதை தொடர்ந்து ஒரு மாயத்தோற்றமும், பின்னர் தங்களுக்கு தெரிந்த பல முகங்களும், சம்பவங்களும் வேகமாக நகரும் ஸ்லைடுகளை போல கண் முன்னே தெரிவதாகவும் கூறி இறந்துள்ளனர். இதிலிருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது, “மனிதன் இறக்கும் போது அவனது மூளை செல்களும் இறக்க தயாரிகின்றன. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத மூளை, செல்களை புதுப்பிக்க தன்னால் இயன்ற விஷயங்களை செய்கிறது. அப்பொழுதுதான் இந்த காமா கதிர்கள் உருவாகிறது. இந்த கதிர்கள் தான் ஒரு பெரிய வெளிச்சமாக அவர்களின் கண்களுக்கு தெரிகிறது.
நெருங்கியவர்களின் முகங்கள்..
பின்னர், தனது செல்கள் மரணிப்பதை தவிர்க்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட மூளை, படிப்படியாக அதன் செயல்பாடுகளை துண்டித்துக் கொள்கிறது. இந்த சமயத்தில்தான் மரணிப்பவர்களின் கண் முன்பு அவர்கள் அனுபவதித்த மகிழ்ச்சியான, துக்கமான நிகழ்வுகளும், நெருக்கமானவர்களின் முகங்களும் சில நொடிகள் ஸ்லைடுகளாக வந்து செல்கின்றன” என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.
ஆன்மீகம் சொல்வது என்ன?
அறிவியலின் இந்தக் கூற்று ஒருபுறம் இருக்க, உயிர் பிரிந்த பின்பு மற்றொரு உயிராக பிறப்பதற்கு அது அண்டவெளியை அடைவதாக ஆன்மீகம் கூறுகிறது. இந்த அண்டவெளிதான் அத்தகைய வெளிச்சத்தோடு இருப்பதாகவும், அங்கு சென்றுவிட்டால் மறு பிறவியை அடைவதற்கான வேலைகள் தொடங்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர்.